/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : நவ 30, 2024 02:39 AM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் க.விலக்கு அருகே ரோந்து சென்ற போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் சரவணகுமார். நேற்று முன்தினம் ரோந்து பணியில் இருந்தார். அப்போது க.விலக்கைச் சேர்ந்த மலைச்சாமி 34, க.விலக்கு தேவர் சிலை அருகில் போலீசாரால் வைக்கப்பட்ட வேகத்தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு ஹைவே பட்ரோல் வாகனத்தில் ரோந்து சென்ற சிறப்பு எஸ்.ஐ., ராஜபாண்டி, கிருஷ்ணசாமி, போலீசார் கதிரவன் ஆகியோருடன் பிரச்னை செய்தார்.
அப்போது அங்கு சென்ற ஏட்டு சரவணகுமார், மலைச்சாமியை அங்கிருந்து போகச் சொன்னார். மதுபோதையில் இருந்த மலைச்சாமி போலீசாரை தரக்குறைவாக பேசியதுடன் சரவணகுமார் கன்னத்தில் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த சரவணகுமார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகாரில் க.விலக்கு எஸ்.ஐ., சவுரியம்மாள்தேவி, மலைச்சாமியை கைது செய்தார்.

