/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலா பயணிகளை தாக்கியவர் கைது
/
சுற்றுலா பயணிகளை தாக்கியவர் கைது
ADDED : ஜன 20, 2026 06:06 AM
மூணாறு: மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட், இரண்டாம் மைல் பகுதியில் சவாரிக்கு செல்லும் ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் மீது ஏறி கொல்லம் கருநாகபள்ளியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் மாலை 'செல்பி' எடுத்தனர். இதுபற்றி கேட்ட போது சுற்றுலா பயணிகள், உள்ளூர்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இச்சம்பவத்தில் நர்சரி டிவிஷன் சுற்றுலா வழிகாட்டி வசந்த் 26, சுற்றுலா பயணிகள் மிதுன் 21, அருண் 22, அனந்துகிருஷ்ணன் 22, ஆதித்யன் 23, நிகிலேஷ் 24, ஆகியோர் காயம் அடைந்தனர். சுற்றுலா பயணிகளின் 7 பவன் தங்க நகைகள் மாயமாகின. மூணாறு, அடிமாலி மருத்துவமனைகளில் காயமடைந்தோர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளை தாக்கிய 19 மீது வழக்கு பதிந்து, ஆனச்சால் சங்குபடியை சேர்ந்த ஷியாஸ் என்பவரை வெள்ளத்தூவல் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

