ADDED : ஏப் 23, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா 28,
இதே ஊரைச் சேர்ந்தவர் நித்திஷ் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு ஜெயசூர்யா அவருடைய வீட்டின் முன்பு உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நித்திஷ் அரிவாள்மனையால் ஜெயசூர்யாவை தாக்கி உள்ளார்.
அவருக்கு துணையாக நித்திசின் தாய் பாண்டியம்மாள், அவரது அக்கா நிவேதா ஆகியோர் இருந்துள்ளனர்.
அரிவாள் மனையால் தாக்கியதில் ஜெயசூர்யா, அவரது பாட்டி பேச்சியம்மாள் ஆகியோர் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ஜெயசூர்யா புகாரில் கடமலைக்குண்டு போலீசார் நித்திஷ் என்பவரை கைது செய்தனர்.