/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வழக்கு செலவுக்கு பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர் கைது
/
வழக்கு செலவுக்கு பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர் கைது
வழக்கு செலவுக்கு பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர் கைது
வழக்கு செலவுக்கு பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர் கைது
ADDED : மார் 19, 2025 04:53 AM
தேவதானப்பட்டி : வழக்கு செலவுக்கு பணமில்லை என அரிவாளுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்ற தணித் 32, என்பவரை கைது செய்தனர். இவருக்கு ஆதரவாக ரோடு மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், போலீசார், ஜெயமங்கலம் முதலக்கம்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் நடந்து சென்ற மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்த பழைய குற்றவாளி தணித் 32,யை சோதனையிட்டனர். இதில் முதுகிற்கு பின்னால் அரிவாள் மறைத்து வைத்திருந்தார்.
அரிவாளை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில், வழக்கு செலவிற்கு பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட வந்ததாக தணித் போலீசாரிடம் தெரிவித்தார். தணித்தை போலீசார் கைது செய்தனர்.
தணித்தை கைது செய்ததற்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் நேற்று முன்தினம் இரவு ஜெயமங்கலம் பெரியகுளம் ரோட்டில் 15 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். ஜெயமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட தங்கராஜ், துரை, ஜெயா, நாகபாண்டி, பாலாஜி, முத்து உட்பட 30 பேர் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.-