/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேட்டைக்கு முயன்றவர் கைது : துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
/
வேட்டைக்கு முயன்றவர் கைது : துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
வேட்டைக்கு முயன்றவர் கைது : துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
வேட்டைக்கு முயன்றவர் கைது : துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
ADDED : அக் 16, 2025 07:40 PM

போடி:தேனி மாவட்டம், போடி அருகே பிச்சாங்கரை வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற போடியை சேர்ந்த முதியவர் சங்கரநாராயணன் 60, என்பவரை வனத்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
போடி புது காலனியை சேர்ந்தவர் சங்கரநாராயணன், மா தோப்புகளுக்கு காவலாளியாக வேலை செய்கிறார். நேற்று வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றுள்ளார்.
அப்போது போடி ரேஞ்சர் அருண்குமார் வனவர்கள் அன்பரசு, நாகராஜ், பிரகாஷ், வேட்டை தடுப்பு காவலர் சுகந்தன் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அங்கிருந்த சங்கர நாராயணனை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரிந்தது. வனத்துறையினர் அவரை கைது செய்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள், 16 தோட்டா க்கள், கத்தி, கோடாரி, ஹெட் லைட்கள், வேட்டைக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.