ADDED : ஆக 07, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தடுப்பு நடவடிக்கையாக கலால்துறை இன்ஸ்பெக்டர் சியாம் தலைமையில் குமுளி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
குமுளி அருகே வல்லாரங்குன்னுவைச் சேர்ந்த மாத்யூ தாமஸ் 48, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு காய்ச்சி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் மற்றும் அதனை தயாரிப்பதற்கான பொருட்களை பறிமுதல் செய்து மாத்யூ தாமசை கைது செய்தனர். கலால் துறை அதிகாரிகள் அசீம், அர்சானா, தடுப்பு அதிகாரிகள் பிஜு, கிருஷ்ணன், ஜேம்ஸ், உதவி கலால் ஆய்வாளர் சதீஷ்குமார் உடன் இருந்தனர்.