ADDED : ஆக 06, 2025 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் பங்களாபட்டியைச் சேர்ந்த தந்தைக்கு, 35 வயதுடைய மகள் திருமணம் ஆகாமல் உள்ளார்.
பெற்றோர் விராலிபட்டிக்கு தோட்டத்து காவல் பணிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த பெண், தனது தோழியை பார்ப்பதற்கு அடிக்கடி செல்வார்.
இதனையறிந்த பெரியகுளம் இ.புதுக்கோட்டையைச் சேர்ந்த தெய்வம் 42. அந்தப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்தப்பெண் 6 மாதம்கர்ப்பமானார். திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இதற்கு தெய்வம் மறுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, தெய்வத்தை கைது செய்தார்.