ADDED : ஜூலை 27, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 47. கேபிள் டிவி நடத்தி வருகிறார்.
தண்டுப்பாளையம் பகுதியில் கேபிள் ஒயர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் 52. முத்துப்பாண்டியிடம் கேபிள் டிவி நடத்தக்கூடாது என அவதூறாக பேசி, ஒயரை வெட்டி சேதப்படுத்தினார். தென்கரை போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.-