ADDED : டிச 31, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி காந்திஜி தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி நாகஜோதி26. சிவகாமி துவக்கப்பள்ளி அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியைச்
சேர்ந்த சரவணக்குமார் 33. நாகஜோதி பெட்டிக்கடைக்கு டூவீலரில் வந்தார். மதுபோதையில் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு அலைபேசி வழியாக பணம் பரிவர்த்தனை செய்வதாக தெரிவித்தார். இந்த வசதி தங்களிடம் இல்லை எனவும் பணத்தை தரும்படி செல்லத்துரை தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரவணக்குமார், நாகஜோதியை அவதூறாக பேசி, செல்லத்துரையை தாக்கியுள்ளார். நாகஜோதி புகாரில் தென்கரை போலீசார் சரவணக்குமாரை கைது செய்தனர்.

