/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் கைது
/
விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் கைது
ADDED : டிச 22, 2024 09:30 AM

மூணாறு : வட்டவடையில் காய்கறி வாங்கி ரூ.1.5 கோடி மோசடி செய்து தலைமறைவானவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் விளையும் காய்கறிகள் நேரடியாகவும், தோட்டக் கலை துறை மூலமும் விவசாயிகள் விற்பனை நடத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோட்டக்கலை துறையினர் சேகரித்த காய்கறிகளுக்கு பணம் வழங்காததால் விவசாயிகள் காய்கறிகள் வழங்க மறுத்து விட்டனர். அதனால் பிரபல தேயிலை கம்பெனியான கே.டி.எச்.பி. கம்பெனியின் செண்டுவாரை எஸ்டேட் தோட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளிடம் காய்கறிகளை சேகரித்து விற்பனை நடத்த முடிவு செய்தனர்.
அதற்கு செண்டுவாரை எஸ்டேட் பி.ஆர். டிவிஷனைச் சேர்ந்த ஊழியர் யேசுராஜ் 32, நியமிக்கப்பட்டார். அவர் விவசாயிகளிடம் சேகரித்த காய்கறிகளை தமிழகம் உள்பட பல பகுதிகளில் விற்பனை செய்தார். அந்த வகையில் விவசாயிகளுக்கு ரூ.1.5 கோடி வழங்காததால், அவர்கள் தோட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். நிர்வாகம் நடத்திய விசாரணையில் யேசுராஜ் முறைகேடுகள் செய்ததாக தெரிய வந்த நிலையில், அவர் தலைமறைவானார்.
தேவிகுளம் போலீசில் விவசாயிகள் புகார் அளித்தனர். சென்னையில் தலைமறைவாக இருந்து வந்த யேசுராஜை, தேவிகுளம் எஸ்.ஐ., ஷாஜூஆன்ட்ரூஸ் தலைமையில் போலீசார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கைது செய்தனர்.