sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டை கிரையம் எழுதித்தருவதாக கூறி ரூ.63.66 லட்சம் மோசடி செய்தவர் கைது

/

வீட்டை கிரையம் எழுதித்தருவதாக கூறி ரூ.63.66 லட்சம் மோசடி செய்தவர் கைது

வீட்டை கிரையம் எழுதித்தருவதாக கூறி ரூ.63.66 லட்சம் மோசடி செய்தவர் கைது

வீட்டை கிரையம் எழுதித்தருவதாக கூறி ரூ.63.66 லட்சம் மோசடி செய்தவர் கைது

1


ADDED : ஜன 01, 2025 01:21 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:21 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள வீட்டை ரூ.63.66 லட்சத்திற்கு கிரையம் பேசி ஒப்பந்தம் செய்து ஏமாற்றி மகளுக்கு தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்த கட்டட தொழிலாளி விஜயகுமாரை 47, போலீசார் கைது செய்தனர்.

தேனி அரண்மனைப்புதுார் பசுமை நகர் சுகந்தி 32. இவரின் தந்தை பாஸ்கரனுக்கும், லட்சுமிபுரத்தை சேர்ந்த விஜயகுமாருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் 2024 ஜூன் 27ல் பாஸ்கரன் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.

அதன்பின் சுகந்தியின் வீட்டிற்கு வந்த கட்டட தொழிலாளி விஜயகுமார், அவரது மனைவி கோகிலா, மகள் காவியா ஆகியோர், 'மகள் காவியா திருமணத்திற்கு பணம் தேவை என்பதால் லட்சுமிபுரத்தில் கோகிலா பெயரில் உள்ள 1809 சதுரடி உள்ள வீட்டை கிரையம் தருவதாக சுகந்தியிடம் கூறி ரூ.63.66லட்சத்திற்கு பேசி, ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டனர்.

அன்றைய தினமே சுகந்தியிடம் ரூ.33 லட்சத்து 66 ஆயிரத்து 200 ரூபாயை மூவரும் ரொக்கமாக பெற்றனர்.

அதன்பின் அந்த வீட்டின் மீது, மூவரும் சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கியிருந்த கடன் தொகை ரூ.20 லட்சத்தை ஒப்பந்தத்தில் உள்ளபடி சுகந்தி செலுத்தினார்.

அதன் பின் ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டனர்.ஆக மொத்தம் ரூ.63 லட்சத்து 66 ஆயிரத்து 200 பெற்று, வீட்டை கிரையம் எழுதித்தருவதாக தெரிவித்தனர்.

பின்னர் அந்த வீட்டை விஜயகுமார், கோகிலா ஆகியோர் இணைந்து மகள் காவியாவிற்குதானசெட்டில்மெண்ட் எழுதி கொடுத்து, சுகந்திக்கு மோசடி செய்தனர்.

இதுகுறித்துசுகந்தி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சுகந்தி தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூவர் மீது மோசடி வழக்கு பதிந்துவிஜயகுமாரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us