/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்தவர் கொலை
/
குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்தவர் கொலை
ADDED : நவ 09, 2025 06:19 AM

தேனி: தேனியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சில நாட்களுக்கு முன் வெளிவந்த வீரபாண்டி ஹைஸ்கூல் தெரு விக்னேஷ் 27, இவரை அதே பகுதியை சேர்ந்த இருவர் நேற்று கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
வீரபாண்டி ஹைஸ்கூல்தெரு ஆட்டோ டிரைவர் விக்னேஷ். இவர் கடந்த ஜூலையில் வீரபாண்டி தடுப்பணை பகுதியில் பெண் ஒருவரை பாலியல் பலாத்கார முயற்சி செய்த வழக்கில் ஆட்டோ டிரைவர்கள் குணால், ஹரிஹரன் ஆகியோருடன் கைதானார்.
மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் செப்.,ல் கைதாகினர். சில நாட்களுக்கு முன் விக்னேஷ் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டருகே அதே பகுதியை சேர்ந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இருவர் கத்தியால் குத்தியதில் விக்னேஷ் உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய வீரபாண்டி போலீசார் அரசு மருத்துவக கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதமா அல்லது பெண்களுடனான தொடர்பினால் ஏற்பட்ட பிரசனையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கொலை தொடர்பாக வீரபாண்டி ஹைஸ்கூல் தெரு யுவராஜ் 27, அபிஷேக் 28 ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

