ADDED : நவ 09, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் வாலிபால், கோ கோ, எறிபந்து, தடகளப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் கோப்பை வழங்கி கவுரவித்தார்.
பள்ளி தாளாளர் லதா,செயலாளர் விஜயராணி, தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

