/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவர் கைது
/
லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவர் கைது
ADDED : டிச 11, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலில் எஸ்.ஐ., ராஜசேகர் மற்றும் போலீசார் கொண்டமாநாயக்கன்பட்டி தனியார் திருமண மண்டபம் அருகே இருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் 5, லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.550 இருந்துள்ளது. விசாரணையில் பிடிபட்ட நபர் உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டியை சேர்ந்த பாலு 48, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் லாட்டரி சீட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

