/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது
/
சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது
ADDED : மே 03, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறில் ராஜீவ்காந்தி காலனியை சேர்ந்தவர் ஆனந்த்சிதுன் 26.
இவர், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோரை குறி வைத்து கஞ்சா விற்பனை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை, மூணாறு போலீசார் கண்காணித்து வந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரமனா தலைமையில் எஸ்.ஐ. நிஷார், ஏ.எஸ்.ஐ. லேகா, போலீசார் டோனி, ரமேஷன், ஹிலால், மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழு ஆனந்த்சிதுன் வீட்டில் சோதனையிட்டனர். அதில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 1.154 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த ரூ.28,820 ஆகியவை சிக்கின. அவற்றை பறிமுதல் செய்து ஆனந்த்சிதுனை கைது செய்தனர்.

