/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மது குடிக்க பணம் தராததால் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது
/
மது குடிக்க பணம் தராததால் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது
மது குடிக்க பணம் தராததால் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது
மது குடிக்க பணம் தராததால் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது
ADDED : மே 04, 2025 05:27 AM
பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி காளியம்மன் கோயில் தெரு பெருமாள் மனைவி ராஜம்மாள் 56.
பெருமாள் கோம்பைதொழுவில் தூய்மை பணியாளராக உள்ளார். ராஜம்மாள் மருமகள் பாண்டீஸ்வரியுடன் வீட்டில் இருந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் உறவினர் அய்யனார் 24. மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ராஜம்மாள் மறுத்துள்ளார். இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது வீடு தீப்பிடித்தது. இதில் முன் பகுதி குடிசை எரிந்து சேதமானது. ராஜம்மாள், பாண்டீஸ்வரி வெளியே வந்து பார்த்தபோது, அங்கிருந்த அய்யனார் எனக்கு மது குடிக்க பணம் தராவிட்டால் வீட்டை தீ வைத்தது போல், உங்களையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். தென்கரை எஸ்.ஐ., கர்ணன், அய்யனாரை கைது செய்தார்.