/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆசிரியரை கத்தியால் குத்தியவர் கைது
/
ஆசிரியரை கத்தியால் குத்தியவர் கைது
ADDED : நவ 15, 2025 05:25 AM
கம்பம், நவ. 15--
நிலப் பிரச்னையில் ஆசிரியரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்
காமயகவுண்டன்பட்டி கிழக்கு தெரு முத்துராஜா 40,சுருளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவருக்கு சுருளிப்பட்டியில் தோட்டம் ஒன்று உள்ளது. தோட்டத்திற்கு அருகில் நிலம் வைத்துள்ள ராமகிருஷ்ணனுடன் பாதை பிரச்னை இருந்துள்ளது. இருகுடும்பத்தினருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.
நேற்று காலை ஆசிரியர் முத்துராஜா பள்ளி இடைவேளையில் அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ குடித்து கொண்டிருந்துள்ளார்.
அங்கு வந்த ராமகிருஷ்ணன் கத்தியால் ஆசிரியர் முத்துராஜாவை முதுகில் குத்தி உள்ளார்.
அக்கம் பக்கத்தினர் ஆசிரியரை கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின் தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். ராயப்பன்பட்டி போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

