/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ., மாநிலத் தலைவர் வருகை குறித்து ஆலோசனை
/
பா.ஜ., மாநிலத் தலைவர் வருகை குறித்து ஆலோசனை
ADDED : நவ 15, 2025 05:24 AM

தேனி: தேனி மாவட்டத்தில் நவ.24, 25 ல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்க உள்ளார்.
அவருக்கு வரவேற்பு, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தேனி பா.ஜ., கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் கதலி நரசிங்கப் பெருமாள் பேசினர். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் வெங்கடேஸ்வரன், பாண்டியன், மாநில பொதுச் செயலாளர்கள் மலைச்சாமி, வினாத், முத்துமணி பங்கேற்றனர். இதில் நவ., 24 மாலை பங்களாமேட்டில் நடக்கும் பொதுக் கூட்டத்திற்கு பொது மக்களை அழைத்து வருதல் வரவேற்பு அளிக்கவும், மறுநாள சங்கராபுரம், முத்துலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு கிராம சபை நடத்துவது, அதற்கு முன் ஜி.எஸ்.டி., குறைப்பு குறித்த வணிகர்களிடம் கருத்துக்கேட்கும்கலந்துரையாடல் கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

