/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணுக்கு கத்திக்குத்து ஒருவர் கைது
/
பெண்ணுக்கு கத்திக்குத்து ஒருவர் கைது
ADDED : அக் 06, 2024 03:39 AM
பெரியகுளம் : பெரியகுளம் அருகே தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்த சுரேஷ் மனைவி மலர் 32. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயராம் மனைவி சுகன்யாவிடம் இரு மாதங்களுக்கு முன்பு ரூ.15 ஆயிரம் பணம் வாங்கியிருந்தார்.
இதில் ரூ. மூன்றாயிரம் சுகன்யாவிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் 15 நாட்களுக்கு முன் மலர் கணவர் இறந்தார். விஜயராம் மலரிடம் பாக்கி பணத்தை கேட்டுள்ளார். ரூ.6 ஆயிரம் கொடுத்த மலர், இரு தினங்களில் பாக்கியை கொடுப்பதாக தெரிவித்தார்.
பணத்தை இப்பவே தரவேண்டும் என அவதூறாக பேசி கத்தியால் மலர் உதட்டில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு மலர் அனுப்பி வைக்கப்பட்டார். தென்கரை போலீசார் விஜயராமை கைது செய்தார்.-