/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஆக 02, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை எஸ்.ஐ., விக்னேஷ். பெரியகுளம்- வத்தலகுண்டு ரோடு கும்பக்கரை பிரிவில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாமரைக்குளம் நபிகள் நாயகம் தெருவைச் சேர்ந்த வேன் டிரைவர் சித்திக்ராஜா 25. விடம், வாகனத்தில் ஆவணங்களை எடுத்து வருமாறு எஸ்.ஐ., விக்னேஷ் தெரிவித்தார்.
அதற்கு சித்திக்ராஜா மறுப்பு தெரிவித்து, வாகனத்தை எடுத்து என்னை தடுத்தால் வாகனத்தை ஏற்றி எஸ்.ஐ., மற்றும் போலீசாரை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். வாகனத்தை இயக்கி தப்பிக்கமுயன்றார். எஸ்.ஐ., கணேஷ் புகாரில் இன்ஸ்பெக்டர் கீதா, சித்திக்ராஜாவை கைது செய்தார்.