/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.பல லட்சம் மோசடி பஞ்சாபில் பதுங்கியவர் கைது

ADDED : ஏப் 16, 2025 08:46 AM

மூணாறு : வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.பல லட்சங்களை மோசடி செய்து, பஞ்சாப் மாநிலத்தில் பதுங்கி இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே அய்யப்பன்கோவில் மாட்டுகட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜினுஜான்சன் 39. இவர், அதே பகுதியில் மக்கள் சேவை மையம் நடத்தி வந்தார். அதன் மறைவில் நியூசிலாந்து, போலந்து உள்பட பல வெளி நாடுகளில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் இருந்து ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பணம் பெற்றார். கட்டப்பனை, உப்புதரா ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவரிடம் பணம் வாங்கியதாக தெரியவந்தது.
இந்நிலையில் ஏழு மாதங்களுக்கு முன்பு விசா தொடர்பாக பஞ்சாப் செல்வதாக கூறி சென்றவர் தலைமறைவானார். அவரை தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டதால் தங்கள் ஏமாற்றப்பட்டதாக பணம் கொடுத்தவர்கள் உணர்ந்தனர். அது தொடர்பாக கட்டப்பனை போலீசில் புகார் அளித்தனர். கட்டப்பனை டி.எஸ்.பி. நிஷாத்மோன் தலைமையில் தனிப்படை போலீசார் பஞ்சாப் மாநிலம் மொஹால் மாவட்டம் சிரக்பூரில் தலைமறைவாக இருந்த ஜினுஜான்சனை கைது செய்து கட்டப்பனைக்கு அழைத்து வந்தனர்.