/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடை முன் மது குடித்தவரை தட்டிக் கேட்டவருக்கு அடி
/
கடை முன் மது குடித்தவரை தட்டிக் கேட்டவருக்கு அடி
ADDED : ஏப் 23, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம் : உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு எதிரில் பி.டி.ஆர். காலனியை சேர்ந்த பாபா பக்ரூதின் 55 கிரைண்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பாபா பக்ருதீனும், அவரது மகன் ராஜா முகமதுவும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தென்னகர் காலனியை சேர்ந்த சத்தியசீலன் 28, கடைக்கு முன் மது குடித்துள்ளர். இதை ராஜா முகமது தட்டிக் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த சத்தியசீலன் கடையில் இருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து ராஜா முகமதுவின் மூக்கிலும், உதட்டிலும் குத்தி ரத்தக் காயம் ஏற்படுத்தினார்.
புகாரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.