UPDATED : நவ 27, 2026 05:04 PM
ADDED : நவ 27, 2026 05:04 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார் 39.
இவர் டூவீலரில் வைகை அணையிலிருந்து ஜெயமங்கலம் ரோட்டில் வீட்டுக்கு செல்லும்போது, பெருமாள் கோயில் அருகே நிலை தடுமாறி டூவீலரிலிருந்து கீழே விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இவரை பரிசோதனை செய்த டாக்டர், முகேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
