/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.72 லட்சம் மோசடி; கடலுாரை சேர்ந்தவர் கைது
/
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.72 லட்சம் மோசடி; கடலுாரை சேர்ந்தவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.72 லட்சம் மோசடி; கடலுாரை சேர்ந்தவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.72 லட்சம் மோசடி; கடலுாரை சேர்ந்தவர் கைது
ADDED : ஜன 15, 2025 12:38 AM

தேனி; தேனியில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாகவும் கூறி ரூ.72 லட்சம் மோசடி செய்த நிறுவன உரிமையாளர் கடலுார் மாவட்டம் ராமலிங்கத்தை 51, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் விருதாசலம் ராமலிங்கம், இவரது மனைவி மகேஸ்வரி இணைந்து தேனி மாவட்டம் போடியில் ஸ்ரீராம் 'அப்ராடு கன்சல்டன்சி' என்ற நிறுவனத்தை நடத்தினர். இந்நிறுவனத்தில் உத்தமபாளையம் சுருளிபட்டி சுமங்கலிபிரியா பணிபுரிந்தார். இவரது உறவினர்கள் 7 பேருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தர ரூ.17.60 லட்சமும், கத்தாரில் நடத்தி வரும் நிறுவனத்தில் பங்கு தாரராக சேர்க்க ரூ.50 லட்சமும் ராமலிங்கம் கேட்டார். இதனை நம்பிய சுமங்கலி பிரியா வங்கி கணக்கு மூலம் ரூ.35.60 லட்சத்தை ராமலிங்கம், மகேஸ்வரிக்கு அனுப்பினார்.
இந்நிலையில் ராமலிங்கத்தின் நண்பர் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை இப்ராஹிம் நகரை சேர்ந்த முகமது அசாரூதீன் அலைபேசியில் சுமங்கலி பிரியாவை தொடர்பு கொண்டார். கத்தாரில் உள்ள வங்கியில் ராமலிங்கம் ரூ.7 கோடி கடன் கேட்டுள்ளார். அதற்கு ரூ.ஒரு கோடி டிபாசிட் செய்ய வேண்டும். நாங்கள் ரூ.80 லட்சம் டிபாசிட் செய்துள்ளோம். ரூ. 20 லட்சம் வழங்கினால், இதுவரை வாங்கி உள்ள மொத்த பணத்தையும் திருப்பி அளிப்பதாக கூறினார். இதனை நம்பியவர் ரூ. 16.61 லட்சத்தை ராமலிங்கம் உள்ளிட்ட மூவருக்கு அனுப்பினார்.
மேலும் குவைத் விசா வாங்கி தருவதாக கூறி ரூ.3.60 லட்சம் வாங்கி போலி விசாவை முகமது அசாரூதீன் வழங்கினார். இதனால் ரூ.72 லட்சத்தை சுமங்கலிப்பிரியா மூவரிடமும் வழங்கி ஏமாந்தார். பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட சுமங்கலிபிரியா தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். ராமலிங்கம்,மனைவி மகேஸ்வரி, முகமது அசாரூதீன் மீது வழக்கு பதிந்து விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2024 நவ.,ல் மகேஸ்வரியை கைது செய்தனர். நேற்று ராமலிங்கத்தை கைது செய்தனர்.