/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடுத்தவர் மனைவியிடம் பேசியவருக்கு கத்திக்குத்து
/
அடுத்தவர் மனைவியிடம் பேசியவருக்கு கத்திக்குத்து
ADDED : ஏப் 06, 2025 08:13 AM
தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டி இந்திராகாலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 30. இவரது மனைவி கற்பகசெல்வி 28. அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 26. கற்பகசெல்வியிடம் அலைபேசியில் பேசி வந்தார். இதனால் ராஜ்குமாருக்கும், மணிகண்டனுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனை, ராஜ்குமார் காதில் கத்தியால் குத்திவிட்டு ஓடியுள்ளார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டார். ஜெயமங்கலம் போலீசார் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ராஜ்குமார் சகோதரி தனலட்சுமி புகாரில் மணிகண்டன் உறவினர்களான பூமுருகன், அவரது மனைவி பழனியம்மாள் என்னை அவதூறாக பேசியும், மணிகண்டன் கல்லால் அடித்து காயப்படுத்தினார். மணிகண்டன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.-