ADDED : ஜூன் 17, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி; தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 50 அடி ஆழமுள்ள திறந்தவெளி கிணறு உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6:45 மணிக்கு அதே பகுதியில் வசிக்கும் விஜயபாரதி 37, திறந்தவெளி கிணறு அருகே இயற்கை உபாதைகள் கழிக்க சென்றார்.
எதிர்பாராத விதமாத கிணற்றுக்குள் தவறி விழுந்தார். விழுந்த அதிர்ச்சியில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தார். நேற்று காலை விழித்தவுடன் கிணற்றுக்குள் இருந்து சத்தம் போட்டார். மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போடி தீயணைப்பு துறையினர் காயம் அடைந்த நிலையில் இருந்த விஜயபாரதியை மீட்டனர்.