/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கணவன், மனைவி சண்டையை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்; தகராறில் தங்க செயின் பறிப்பு

ADDED : ஆக 03, 2025 03:59 AM
தேனி : தேனி தாடிச்சேரி வடக்குத்தெரு ராஜேஸ்கண்ணன். தேனி மெட்டல் கடைதொழிலாளி. இவர் ஜூலை 31ல் இரவு அரண்மனைப்புதுார் விலக்கில் இருந்து ஓடைப்பட்டி செல்லும் அரசு பஸ்சில் ஊருக்குச் சென்றார். அப்போது ராஜேஸ்கண்ணன் இருக்கைக்கு முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த தாடிச்சேரியை சேர்ந்த சங்கிலி தனது மனைவியுடன் சண்டையிட்டு, போதையில் தகராறு செய்து வந்தார். இதனை ராஜேஸ்கண்ணன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சங்கிலி, தகாத வார்த்தைகளால் திட்டினார். பஸ் தாடிச்சேரி சென்றதும், சங்கிலி, ராஜேஸ்கண்ணனின் சட்டையை பிடித்து இழுத்தார். தகராறில் இருவரும் பஸ்சை விட்டு கீழே விழுந்தனர். ராஜேஸ் கண்ணன் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் பாதி சங்கிலியிடமும், மீதி செயின் ராஜேஸ்கண்ணனிடம் சிக்கின. ராஜேஸ்கண்ணன் செயினை தர கூறினார்.
அப்போது மது பாட்டிலால் ராஜேஸ் கண்ணன் தலையில் தாக்கி தப்பி ஓடினார். காயம் அடைந்த ராஜேஸ்கண்ணன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.