/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொழிலாளியை வெட்டியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
/
தொழிலாளியை வெட்டியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
ADDED : டிச 11, 2024 07:05 AM

தேனி : உத்தமபாளையம் அருகே ஓய்வு பெற்ற பேரூராட்சி துப்புரவு தொழிலாளி சின்னன் 73, என்பவரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட வெள்ளையனுக்கு 44, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காமயக்கவுண்டன்பட்டி பேரூராட்சி கருமாரியம்மன் கோயில் தெரு சின்னன் 73. இவர் அப் பேரூராட்சியின் ஓய்வு பெற்ற துப்புரவுப் பணியாளர்.
ஓய்வு பெற்ற பின்பும் அங்குள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணி செய்தார். 2017 பிப்.1ல் அதேப்பகுதி கிழக்குத் தெரு வெள்ளையன்பெண்கள் கழிப்பறையில் நுழைந்தார்.
அவரை தடுத்த சின்னன், பெண்கள் கழிப்பறைக்குசெல்லக்கூடாது' என்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த வெள்ளையன், சின்னனின் ஜாதியைக் கூறி இழிவாக பேசி, அரிவாளால் சின்னனின் வலது கையில் வெட்டி காயப்படுத்தினார்.
இதை தடுத்த குணாவிற்கும் காயம் ஏற்பட்டது.
இருவரும் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சின்னன் புகாரில், வெள்ளையன் மீது ராயப்பன்பட்டி போலீசார் கொலை முயற்சி, எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தார்.
இந்த வழக்கு தேனி மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் இசக்கிவேல் ஆஜரானார்.
குற்றவாளி வெள்ளயனுக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம் தித்து, நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.