/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது
/
டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது
ADDED : அக் 09, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் வடக்கு கோபால் தெரு டிராக்டர் டிரைவர் சுரேஷ் 42. இவர் வேலையில்லாத நேரத்தில் தனது உறவினரான தசரதனின் வீரப்ப அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள தோப்பில் டிராக்டரை நிறுத்தி வைப்பது வழக்கம்.
அக்., 6ல் டிராக்டரை நிறுத்தியவர் மறுநாள் பார்த்த போது, டிராக்டரில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியை காணவில்லை.
விசாரித்தில் டிராக்டரில் இருந்த பேட்டரியை அல்லிநகரம் முத்துகோபால் 31, குச்சனுார் சசி 29, அல்லிநகரம் ராஜா 28, ஆகிய மூவர் திருடியது தெரியவந்தது. மூவரின் மீது வழக்குப்பதிந்த அல்லிநகரம் போலீசார் முத்துக்கோபாலை கைது செய்தனர்.