/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் அக்.17ல் திறப்பு
/
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் அக்.17ல் திறப்பு
ADDED : அக் 15, 2024 05:39 AM

தேவதானப்பட்டி: மஞ்சளாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து 116 நாட்கள் 55 அடியாக உயர்ந்துள்ளது. அக்.,17ல் முதல் போக நெல் சாகுபடிக்கும், அன்றைய தினம் சோத்துப்பாறை அணையும் திறக்கப்பட உள்ளது.
தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து உள்ளது. மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்பு கருதி 55 அடி நீர் தேக்கப்படும். அணையில் 435 மி.கன அடி நீர் உள்ளது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 138 கன அடி நீர் வரத்து உள்ளது. இதனை இரு மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.
மழையளவு 1.6 மி.மீ.,மஞ்சளாறு அணையில் ஜூன் 20 முதல் நேற்று அக்.,14 வரை 116 நாட்களாக அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்து நிலை நிறுத்தப்பட்டது. தேனி, திண்டுக்கல் மாவட்டம் 5259 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு அக்., 17 நீர் திறக்கப்பட உள்ளது.
சோத்துப்பாறை அணை: பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சோத்துப்பாறை அணை பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வருகிறது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி. நேற்று 122.67 அடியாகவும், நீர் வரத்து 43.16 கன அடியாக உள்ளது. மழையளவு 6 மி.மீ., அணைப்பகுதியில் மழை பெய்வதால் ஒரிரு நாட்களில் அணை நிரம்பும். அணை நீரினால் 2865 ஏக்கர் பாசன வசதி பெறும். இரு அணைகளையும் அக்.,17 திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.