/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐயப்பசுவாமி கோயிலில் மண்டல உற்ஸவ விழா
/
ஐயப்பசுவாமி கோயிலில் மண்டல உற்ஸவ விழா
ADDED : டிச 29, 2024 05:02 AM
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி நன்மை தருவார்கள் திருத்தலம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல உற்ஸவ விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு முதல் நாளில் ஐயப்ப சுவாமிக்கு 1008 பூஜை, அதனைத் தொடர்ந்து அம்மன் கரகம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இரவில் ஐயப்ப சுவாமி, அம்மன் ஊர்வலம் நடந்தது. 2ம் நாளில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அய்யனார், பத்ரகாளி, குபேர வாராகி, கவுமாரி அம்மன் சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
49 அடி உயர மாகாளி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
இரவில் ஐயப்ப சுவாமியின் பதினெட்டாம் படியில் விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.