/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மங்கையர்க்கரசி மாதர் சங்க பொன் விழா
/
மங்கையர்க்கரசி மாதர் சங்க பொன் விழா
ADDED : செப் 08, 2025 06:25 AM

--பெரியகுளம் : பெரியகுளத்தில் பெரியபுராணம், திருக்குறள், வள்ளலார், தாயுமானவர் பாடல்கள் உட்பட ஆன்மிக சொற்பொழிவு சேவை செய்து வரும் மங்கையர்க்கரசி மாதர் சங்கத்தின் பொன் விழா கோலாகலமாக நடந்தது.
பெரியகுளம் வடகரை தனியார் திருமண மண்டபத்தில் மங்கையர்க்கரசி மாதர் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா புலவர் ராஜரத்தினம் தலைமையில் நடந்தது. இச்சங்கத்தினர் வாரந்தோறும் திங்கட்கிழமை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல், ராமாயணம், மகாபாரதம், திருக்குறள், பெரியபுராணம், வள்ளலார், தாயுமானவர் பாடல்கள், 63 நாயன்மார்களின் குருபூஜை உட்பட ஆன்மிக சொற்பொழிவுகளையும், திருவிளையாடல் புராணம், சொற்பொழிவை புலவர் ராஜரத்தினம் தொடர்ந்து 50 ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறார்.
மங்கையர்கரசி மாதர் சங்கத்தின் தலைவர் லட்சுமி, செயலாளர் தமிழ்ச்செல்வி, பொருளாளர் மீனாட்சி, உறுப்பினர்கள் புஷ்பலட்சுமி, நமசிவாயம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சுந்தரம் 'மங்கையர் செய்த மாதவம்' தலைப்பில் பேசினார். தொடர்ந்து விழா மலரை வெளியிட அதனை தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளர் சிதம்பரசூரியவேலு பெற்றுக் கொண்டார்.
தமிழாசிரியர் பரந்தாமன், முன்னாள் எஸ்.ஐ., ரெங்கராஜ், வர்த்தக பிரமுகர்கள் ரத்தினவேல், மணிகார்த்திக், பாலசுப்பிரமணியன், விஜயகுமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சங்கத்தினர் செய்திருந்தனர். உறுப்பினர் சுமதி நன்றி தெரிவித்தார்.-