/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மஞ்சளாறு அணை 144 நாட்களாக நீர் மட்டம் உயர்ந்து சாதனை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் சாரல், மழை எதிரொலி

ADDED : நவ 11, 2024 05:05 AM

தேவதானப்பட்டி: மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான இருட்டாறு, தலையாறு பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கடந்த 144 நாட்களாக 55 அடியாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் சீராக உள்ளது. இதனால் இம்மாதிரி அணை சீராக உயர்ந்திருப்பது கடந்த 57 ஆண்டுகளில் முதல் பதிவு என தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து, வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. முருகமலை, இருட்டாறு, தலையாறு, வறட்டாறு, பெருமாள் மலை பகுதிகளிலும், நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்பு கருதி 55 அடி நீர் தேக்கப்படும். அணையில் 435.37 மி., கன அடி நீர் உள்ளது. மஞ்சளாறு அணையில் 1967ல் விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணை திறந்து 57 ஆண்டுகளில் முதன் முறையாக ஜூன் 20 முதல் நேற்று வரை 144 நாட்களாக அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்த நிலையில் சீராக உள்ளது.
அக்.17 ல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள 3148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, கட்டக்காமன்பட்டி, கணவாய்பட்டி, குன்னுவாராயன் கோட்டை 2111 ஏக்கர் என 5259 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இருட்டாறு, தலையாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் சாரல் மழையும், அவ்வப்போது மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. இதனால் இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று அணைக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், பாசனத்திற்காக அதே அளவில் வெளியேறுகிறது.--