/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குச்சனுார், வீரபாண்டியில் மஞ்சப்பை இயந்திரங்கள்
/
குச்சனுார், வீரபாண்டியில் மஞ்சப்பை இயந்திரங்கள்
ADDED : பிப் 19, 2024 05:11 AM
தேனி, : அரசு சார்பில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த பல்வேறு துறைகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தேனி நகராட்சி, ஆண்டிப்பட்டி பேரூராட்சி, பெரியகுளம் கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சப்பை இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. மஞ்சப்பை இயந்திரத்தில் 10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அனைத்து பேரூராட்சிகளிலும் நிறுவ அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி வீரபாண்டி பேரூராட்சியில் கவுமாரியம்மன் கோயில், குச்சனுார் சுயம்பு சனீஸ்வரபகவான் கோயில் உட்பட 15 பேரூராட்சிகளில் நிறுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

