/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாடித்தோட்ட உபகரணங்கள் கூடுதல் ஒதுக்கீடு வேண்டும் பதிவு செய்து பலர் காத்திருப்பு

ADDED : செப் 26, 2024 05:43 AM
தேனி: மாவட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க மானியத்தில் வழங்கப்படும் உபகரணங்கள் கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாடித்தோட்டம், அலங்கார செடிகள் வளர்த்தல், சிறிய காய்கறித்தோட்டம் அமைக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பள்ளிகள், கல்லுாரிகளில் மாணவர்களுக்கு மாடித்தோட்டம், வீட்டுதோட்டம் அமைத்தல் பற்றி தொடர் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.900 மதிப்பிலான மாடித்தோட்ட உபகரணங்கள் 6 கோ-கோ பித் கட்டி, 6 செடி வளர்ப்பு பைகள், 6 பொட்டலம் காய்கறி விதைகள், 400 கிராம் உயிர் உரம், 100மி.லி., இயற்கை பூச்சி கொல்லி மருந்து, பயிற்சி கையேடு உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் ரூ.450க்கு வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் கடந்தாண்டு, நடப்பாண்டில் சேர்த்து 450 பேருக்கு மாடித்தோட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. இதனால் உபகரணங்கள் பெற பலரும் உழவன் செயலியில் விண்ணப்பிக்கின்றனர்.
ஆனால் செயலியில் ஒரிரு நாட்களிலேயே போதிய விண்ணப்பம் வந்து விட்டதாக கூறி பதிவு செய்ய முடிவதில்லை என புகார் கூறுகின்றனர்.
எனவே, வரும் ஆண்டுகளில் மாடித்தோட்ட உபகரணங்கள் கூடுதல் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும் வழங்கப்படும் உபகரணங்களை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனரா என தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.