/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ., சார்பில் மாரத்தான்: 283 பேர் பங்கேற்பு
/
பா.ஜ., சார்பில் மாரத்தான்: 283 பேர் பங்கேற்பு
ADDED : செப் 29, 2024 06:07 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் பா.ஜ.,சார்பில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 106 பெண்கள் உட்பட 283 பேர் பங்கேற்றனர்.
பண்டிட் தீன தயாள் உபாத்தியாயா, பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிபட்டியில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. போட்டியில் ஆண்களுக்கு 9.5 கி.மீ., தூரமும், பெண்களுக்கு 5.5 கி.மீ., தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆண்கள் பிரிவில் 177 பேரும், பெண்கள் பிரிவில் 106 பேரும் பங்கேற்றனர்.
பெண்கள் போட்டியில் முதல் மூன்று இடங்களில் சுவாதி, கீர்த்திகா, மீனாட்சி வெற்றி பெற்றனர். ஆண்களுக்கான போட்டியில் கண்ணன், ஆனந்தராஜ், ஜெயசீலன் வெற்றி பெற்றனர். இரு போட்டிகளிலும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.5000, 3ம் பரிசாக ரூ.3000, ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் முன்னாள் மண்டல் தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்புகளை திருமல்ராஜ், செல்வமுத்து, சரவணன், விமல்குமார், ராஜேஷ்குமார், பூபாண்டி, நாகராஜன், ராமமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். முன்னாள் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், முன்னாள் கூட்ட அமைப்பு செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், தமிழக மலர் விவசாயிகள் சங்க தலைவர் சின்னச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.