/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திண்டுக்கல்-குமுளி ரயில்பாதை கோரி இன்று நடைபயணம்
/
திண்டுக்கல்-குமுளி ரயில்பாதை கோரி இன்று நடைபயணம்
ADDED : மார் 22, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: திண்டுக்கலில் இருந்து குமுளிக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை இருந்து வருகிறது.
திண்டுக்கல் -குமுளி அகல ரயில்பாதை திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி இன்று தேனி பங்களா மேட்டில் இருந்து திண்டுக்கல் வரை 75 கி.மீ., துாரம் நடைபயணமாக சென்று திண்டுக்கல் கலெக்டர், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் மனு அளிக்கின்றனர். நடைபயணத்தில் மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் பலரும் பங்கேற்கின்றனர். நடைபயண போராட்ட குழு தலைவர் சங்கர நாராயணன் தலைமையில் பங்கேற்கின்றனர்.