/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுபார் அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூ., இன்று சாகும் வரை உண்ணாவிரதம்
/
மதுபார் அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூ., இன்று சாகும் வரை உண்ணாவிரதம்
மதுபார் அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூ., இன்று சாகும் வரை உண்ணாவிரதம்
மதுபார் அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூ., இன்று சாகும் வரை உண்ணாவிரதம்
ADDED : மார் 11, 2024 06:48 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் மதுபார்களை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், அதன் நிர்வாகிகள் இன்று (மார்ச் 11) முதல் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் காந்தி சிலை அருகே, வடுகபட்டி ரோடு, தேனி ரோடு ஆகிய இடங்களில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மாநில நெடுஞ்சாலையில் தனியார் மதுபார்கள் செயல்படுகின்றன. இந்த பார்களால் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. மூன்றாந்தல் மதுபாரில் இருந்து போதையில் டூவீலர்களில் வெளியேறும் ஆசாமிகள் திண்டுக்கல்--- தேனி ரோட்டில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர். அவ்வழியே செல்லும் பெண்களுக்கு போதை ஆசாமிகளால் அச்சுறுத்தல், இடையூறு தினந்தோறும் நடந்து வருகிறது. மதுபார்களை அகற்றக்கோரி சில கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் அவர்கள் உடனே அமைதியாகி விடுவார்கள். பின் மதுபார் பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள். இப்பிரச்னையில் தீவிரமாக மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம், முற்றுகை, பூட்டு போடும் போராட்டம், காத்திருப்பு போராட்டம் என தொடர் போராட்டங்கள் நடத்தினர்.
ஆனாலும் இன்னும் தீர்வாக வில்லை. இதனால் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ., அறிவித்துள்ளது. இப்போராட்டத்திலாவது மதுபார் மூடப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் எழுந்துள்ளது.

