sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் பிரசவகால தாய் சேய் இறப்பு விகிதம் அதிகரிப்பு; சராசரிக்கு கொண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

/

மாவட்டத்தில் பிரசவகால தாய் சேய் இறப்பு விகிதம் அதிகரிப்பு; சராசரிக்கு கொண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

மாவட்டத்தில் பிரசவகால தாய் சேய் இறப்பு விகிதம் அதிகரிப்பு; சராசரிக்கு கொண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

மாவட்டத்தில் பிரசவகால தாய் சேய் இறப்பு விகிதம் அதிகரிப்பு; சராசரிக்கு கொண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு


ADDED : செப் 10, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 10, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி மாவட்டத்தில் தமிழகத்தில் வளரிளம் பெண்களின் திருமணங்கள், அதனால் ஏற்படும் கர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு ஒரு லட்சம் பேர்களுக்கு 39.4 ஆகவும், மகப்பேறு குழந்தை இறப்பு ஆயிரம் பேர்களுக்கு 7.7 ஆகவும் உள்ளது.

ஆனால் தேனி மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு 43.3 ஆகவும், குழந்தை இறப்பு 9.4 ஆகவும் உள்ளது. அதாவது மாநில சராசரியை விட அதிகமாக உள்ளது. எனவே சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் மேகமலையில் நடந்தது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு, குழந்தை இறப்பு மாவட்ட சுகாதாரத் துறைக்கு சவாலாக உள்ளது. எனவே சுகாதாரத்துறை, குழந்தை பாதுகாப்பு அலுவலர், சமூக நலத்துறை, மகளிர் போலீசார் இணைந்து வளரிளம் பெண்கள் திருமணத்தை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளனர்.

இப் பணியில் கிராமங்களில் வளரிளம் பெண்கள் அனைவரும் கிராமபுற செவிலியர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இந்த பணிகளில் சுகாதார செவிலியர்கள் முக்கிய பங்காற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மண மக்களின் வயதை உறுதிப்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வளரிளம் பெண்கள் திருமணத்தை அனைத்து வகையிலும் தடுத்து நிறுத்த முனைப்புடன் களம் இறங்கி உள்ளோம்.

மாநில சராசரியை மகப்பேறு இறப்பு மற்றும் மகப்பேறு குழந்தை இறப்பில் இந்த ஆண்டு எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.'', என்றனர்.






      Dinamalar
      Follow us