/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒன்றிய கூட்டத்தில் பிற துறை அதிகாரிகள் பங்கேற்காதது ஏன் க.மயிலாடும்பாறை ஒன்றிய கவுன்சிலர்கள் புகார்

ADDED : பிப் 03, 2024 04:30 AM
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சித்ரா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சேகரன், பி.டி.ஓ.,இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதலுக்காக வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் தன்னிச்சையான முடிவுகளால் கிராமங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும், ஒன்றிய கூட்டத்திற்கு சுகாதாரத்துறை, மின்துறை உட்பட அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் யாரும் கலந்து கொள்வதில்லை என்று கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அடுத்த கூட்டத்தில் இந்த குறைகள் சரி செய்யப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.
கண்டமனூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அங்குச்சாமி ஒன்றிய குழு தலைவரிடம் அளித்த புகார் மனுவில் 'கண்டமனூர் கோட்டை கருப்பசாமி கோயில் அருகில் 2018 - 19ம் ஆண்டு ரூ.29.50 லட்சம் செலவில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு இதுவரையில் பயன்பாட்டிற்கு வரவில்லை. தொட்டியில் நீர் கசிவு உள்ளது.
இதுவரை எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் தெரிவித்த பின் கூட்டம் முடிந்தது.