/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார் புறவழிச்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
/
கூடலுார் புறவழிச்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
கூடலுார் புறவழிச்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
கூடலுார் புறவழிச்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
ADDED : ஜூலை 24, 2025 05:43 AM

கூடலுார் : கூடலூர் புறவழிச்சாலையில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை பல நாட்களாக அகற்றாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரையுள்ள 4 கி.மீ., தூர புறவழிச்சாலை உள்ளது.
கடந்த சில நாட்களாக புறவழிச்சாலையின் இரு பகுதிகளிலும் குப்பை, பாலிதீன் கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது. அதிலும் கோழி கழிவுகள் ஆங்காங்கே குவியலாக கொட்டப்பட்டு பல நாட்கள் அகற்றாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சியில் சேகரமாகும் குப்பை பெத்துகுளம் பகுதியில் கொட்டப்படுகிறது. அப்பகுதி நிரம்பி வழிவதால் குப்பை கொட்ட இடமின்றி நகராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது. கோழி இறைச்சிக் கடைகளில் வெளியேறும் கழிவுகள் குடியிருப்புகளை ஒட்டியுள்ள பெத்துக்குளம் மற்றும் ஒட்டான் குளம் கரைப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. உடனடியாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதால் தற்போது புறவழிச் சாலையில் கொட்டுவது அதிகரித்துள்ளது. குப்பை, கழிவுகளை அகற்றுவதில் தேசிய நெடுஞ்சாலைத் துறையா, நகராட்சி நிர்வாகமா என்பதில் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. அதனால் புறவழிச் சாலைகளில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க முடியவில்லை.

