/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய நெடுஞ்சாலையில் வீசப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

ADDED : ஏப் 14, 2025 06:17 AM
தேனி:' தேனி மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் வீசப்படும் இறைச்சி கழிவுகள், குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
தேனி மாவட்டம் வழியாக கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இந்த ரோட்டில் தேனி நகர் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. அப்பகுதியில் தாமரைகுளம் அமைந்துள்ளது.
குளத்தின் அருகே செல்லும் ரயில்வே தண்டவாளத்திற்கும் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே உள்ள பகுதியில் சாக்கு மூடைகளில் இறைச்சி கழிவுகள், துணிகள், குப்பையை கொட்டுவதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் குப்பை வீசுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.