/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் மீது அரசு பஸ் மோதி மெக்கானிக் பலி
/
டூவீலர் மீது அரசு பஸ் மோதி மெக்கானிக் பலி
ADDED : ஜூலை 25, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தென்காசி மாவட்டம் கீழ்கடையம் புலவநுாரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் 38, இவர் தேனியில் தங்கி மெக்கானிக்காக பணிபுரிந்தார்.
இந்நிலையில் ஹரிகிருஷ்ணன், ஜூலை 23, இரவில் டூவீலரில் தேனி நேரு சிலை சிக்னல் அருகே வந்த போது, ஆண்டிபட்டி மொட்டனுாத்து நாகுலகவுண்டன்பட்டி டிரைவர் ராமராசு எதிரே ஒட்டி வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியது. ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தேனி போலீசார் உடலை மீட்டு, தேனி அரசுமருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பினர். விபத்தில் பஸ்சின் முன்புறம் சேதமடைந்தது. அரசு பஸ் டிரைவர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.