ADDED : பிப் 21, 2024 05:41 AM

தேனி: தேனி நட்டாத்தி நாடார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச நுரையீரல், சிறுநீரகப் பரிசோதனை முகாம் கடமலைக்குண்டுவில் நடந்தது.
மருத்துவ முகாமை கடமலைக்குண்டு கிராம கமிட்டித் தலைவர் கணேசன், செயலாளர் கோவிந்தன், ஊர் நாட்டாண்மை பால்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நாள்பட்ட சளி இருமல், ஆஸ்துமா, இளைப்பு, மூச்சிரைப்பு, குறட்டை பிரச்னை, தீவிர சோர்வு, காசநோய், சுவாச அடைப்பு பிரச்னை, மார்பு சளி பிரச்னை, சிறுநீரகக்கல், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீரில் ரத்தம், சிறுநீர்ப்பாதையில் சதை வளர்ச்சி, சிறுநீரக புற்றுநோய், அடிவயிற்று வலி, சிறுநீர் தொற்று, ஆண் மலட்டு தன்மை, ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் முகாமில் பங்கேற்றனர்.
நுரையீரல் சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் நிரஞ்சன்பிரபாகர், சிறுநீரக சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் செல்லபாண்டியன் ஆகியோர் முகாமில் பங்கேற்றவர்களை பரிசோதனை செய்து, ஆலோசனை், மருந்துகள் வழங்கினர். தேவைபட்டோருக்கு நுரையீரல் திறன் பரிசோதனை, சிறுநீரின் அளவு, வேகம் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டன.
முகாமில் 250க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். ஏற்பாடுகளை மருத்துவமனையின் மேலாளர் சாந்தி, மக்கள் தொடர்பு மேலாளர் ஷேக் பரீத், மக்கள் தொடர்பு அலுவலர்கள் பாபு, அப்பாஸ் ஆகியோர் செய்திருந்தனர்

