ADDED : ஜூலை 31, 2025 03:01 AM
கூடலுார் : கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில், மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது. கல்லுாரி செயலாளர் ராமகிருஷ்ணன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த இம்முகாமில், இணைச் செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர்.
டாக்டர் ஜோஸ்பின் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும், டாக்டர் ராகேஷ் எலும்பு மூட்டு தொடர்பான பிரச்னைகளுக்கும், டாக்டர் தீக்கிதா பெண்கள் மருத்துவம் குறித்தும், டாக்டர்கள் டேவிட், ஜெயஸ்ரீ பொது மருத்துவம் தொடர்பாகவும், டாக்டர் விக்னேஷ் அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்சனைகளுக்கும் ஆலோசனை வழங்கினர்.
இதில் கண் மற்றும் பல் தொடர்பான மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டன. 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.
விரிவுரையாளர்கள், அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.