ADDED : ஆக 29, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கண்டமனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை(ஆக.,30) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் பொது மருத்துவம், எலும்பியல், பொது அறுவை சிகிச்சை, பெண்கள்நலன், குழந்தைகள் நலன், பல் மருத்துவம், கண் மருத்துவம், காதுமூக்கு தொண்டை, மன நலம், நுரையீரல் பிரிவு, சக்கரை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை, ரத்தம், சளி, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சோனோகிராம் பரிசோதனைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் பதிவு செய்த கட்டுமான, அமைப்பு சாரா, ஆட்டோ ஓட்டுநர் நல வாரியம் உள்ளிட்ட 17 வாரியங்களில் பதிவு செய்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தெரிவித்துள்ளார்.