/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மருத்துவக் கல்லுாரியில் மாத்திரை தட்டுப்பாடா மருத்துவ அதிகாரி விளக்கம்

ADDED : பிப் 02, 2025 04:00 AM
தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாத்திரைகள் குறைவாக வழங்கப்படுவதாக வீடியோ பரவியது குறித்து மருத்துவமனையில் மாத்திரை தட்டுபாடு இல்லை என மருத்துவக்கல்லுாரி அதிகாரி தெரிவித்தார்.
தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர் ஒரு நோயாளிக்கு பரிந்துரைத்த சீட்டில் 7 நாட்கள் மாத்திரை வழங்க குறிப்பிட்டு இருந்தார். ஆனால் மாத்திரை வழங்கும் கவுன்டரில் 5 நாட்களுக்கு மட்டும் வழங்குவதாக வீடியோ பரவியது. அதில் இதே போல் பலருக்கும் மாத்திரைகள் குறைத்து வழங்குவதாக புகார் கூறினர். இதனால் மருத்துவக்கல்லுாரியில் மாத்திரை தட்டுப்பாடு என்ற தகவல் பரவியது.
இதுபற்றி மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பிற நோயாளிகளுக்கு 'ஆன்டிபயாடிக் ' மாத்திரைகள் அதிகபட்சம் 5 நாட்களுக்குத்தான் வழங்கப்படும். பிரச்னைக்குரிய மருந்து சீட்டை பயிற்சி மருத்துவர் ஒருவர் 7 நாட்களுக்கு என எழுதி கொடுத்தது தெரிந்தது.
பயிற்சி மருத்துவர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இல்லை',என்றனர்.