ADDED : நவ 20, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அரவிந்த் கண் மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லுாரியும் இணைந்து மருத்துவக்கல்லுாரியில் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கண் விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகள், சிகிச்சைகள் பற்றிய கருத்தரங்கு நடந்தது. மருத்துவக்கல்லுாரி டீன் முத்துசித்ரா தலைமை வகித்தார்.
கண் மருத்துவ துறை தலைவர் டாக்டர் கணபதி ராஜேஷ், குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் செல்வக்குமார், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ஹேமா முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

