sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பெண்கள் மாங்கல்யம் கயிறு மாற்றி பரவசம்

/

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பெண்கள் மாங்கல்யம் கயிறு மாற்றி பரவசம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பெண்கள் மாங்கல்யம் கயிறு மாற்றி பரவசம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பெண்கள் மாங்கல்யம் கயிறு மாற்றி பரவசம்


ADDED : மே 09, 2025 05:51 AM

Google News

ADDED : மே 09, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

தேனி பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சோமாஸ்கந்தர் சன்னதியில் நேற்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபம் நடந்தது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. குருக்கள் கணேஷ்சர்மா, சங்கர்சர்மா ஆகியோர் கல்யாண வைபவத்தை நடத்தினர்.

மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த திருக்கல்யாணம் விமர்ச்சியைாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பெரியகுளம்: தென்கரை ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயில், சுதந்திர வீதி மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், வடகரை தையல் நாயகி வைத்தீஸ்வரன் கோயிலில்களில் 'மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர்' திருக்கல்யாணம் நாதஸ்வரம், மேள, தாளம் இசைக்க கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு தாலி ( மஞ்சள் கயிறு), வளையல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கோயிலில் திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்கள் புதிய தாலி மாற்றிக்கொண்டனர்.

போடி: சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகளுடன் திருக்கல்யாணம் நடந்தது.திருக்கல்யாணம் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். இக்கோயிலில் முருகன், வள்ளி,, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தன.

சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர்.

போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டன. தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சிக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

தென்கரை ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயில், சுதந்திர வீதி மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், வடகரை தையல் நாயகி வைத்தீஸ்வரன் கோயிலில்களில் 'மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர்' திருக்கல்யாணம் நாதஸ்வரம், மேள, தாளம் இசைக்க கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு தாலி ( மஞ்சள் கயிறு), வளையல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலில் திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்கள் புதிய தாலி மாற்றிக்கொண்டனர்.

-சிலமலையில் திருக்கல்யாணம்


போடி அருகே சிலமலையில் எஜமான் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் டிரை ஏர் டெக்னாலஜிஸ் நிறுவன வளாகத்தில் மீனாட்சி, சொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சில்லமரத்துப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து மணமகனாக சொக்கநாதரையும், மணமகளாக மீனாட்சி அம்மனையும் சீர்வரிசை பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். சிறப்பு பூஜைகளுடன் மீனாட்சி, சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது.

டிரை ஏர் டெக்னாலஜிஸ் நிறுவனர் ரமேஷ் தலைமை வகித்தார்.

மீனாட்சி சொக்கநாதர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வழங்கப்பட்ட புதிய மாங்கல்யங்களை சுமங்கலிப் பெண்கள் அணிந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டன.

விழாவில் தொழிலதிபர் கிருபாகரன், டிரை ஏர் டெக்னாலஜிஸ் நிறுவன பணியாளர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us