/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் பயிற்சி பள்ளியில் பயின்ற முன்னாள் போலீசார்கள் சந்திப்பு
/
போலீஸ் பயிற்சி பள்ளியில் பயின்ற முன்னாள் போலீசார்கள் சந்திப்பு
போலீஸ் பயிற்சி பள்ளியில் பயின்ற முன்னாள் போலீசார்கள் சந்திப்பு
போலீஸ் பயிற்சி பள்ளியில் பயின்ற முன்னாள் போலீசார்கள் சந்திப்பு
ADDED : ஜன 31, 2025 12:12 AM

ஆண்டிபட்டி; கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் 1984ம் ஆண்டு 2ம் நிலை போலீசாராக பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பணி ஓய்வுக்கு பின் வைகை அணையில் சந்தித்தனர். பயிற்சி பள்ளியில்   பயிற்சி பெற்ற போலீசார்   ஒன்றிணைந்து ஆண்டுதோறும் விழா நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு வைகை அணை பாலர் இல்லத்தில் 3ம் ஆண்டு சந்திப்பை நடத்தினர். விழாவில் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் ராஜன் தலைமை வகித்தார்.  மாநில தலைவர் ராமச்சந்திரன்,  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போலீஸ் பணியின் போது நடந்த நிகழ்வுகள் அனுபவங்கள் குறித்து பேசினர்.
சங்க உறுப்பினர்களிடம் ஆண்டு சந்தா ரூ.1000 வசூலித்து அதன் மூலம் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் மகன், மகள் திருமணத்திற்கு ரூ.5000 வழங்குவதும், சங்க உறுப்பினர் இயற்கை மரணம் அல்லது அசாதாரண சூழ்நிலையில் இறந்தால் சங்க உறுப்பினர்களிடம் ரூ.2000 வீதம் வசூல் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை, கோவை, மதுரை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 120 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.  பயிற்சி பெற்றவர்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்து எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., உட்பட பல்வேறு உயர் பதவிகளுக்கு சென்று ஓய்வு பெற்றுள்ளனர்.

